டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக, மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
நேற்று 63.18 அடியாக இருந்த மேட்டூ்ர் அணையின் நீர்மட்டம் இன்று சற்று
அதிகரித்து 63.46 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 27.33 டி.எம்.சி.யாக
உள்ளது. நீர்வரத்தை பொறுத்தவரை, தமிழகத்தில் பரவலாக மழை பெய்த போதிலும்,
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவாக உள்ளதால், நேற்று 5, 410 கன
அடியாக இருந்த நீர் வரத்து, இன்று காலை 3 ஆயிரத்து 673 கன அடியாக
குறைந்துள்ளது.
எனினும், காவிரி டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருவதால், இன்று 1,000 கன அடி நீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது.
-Er.மாதேஷ்