சேலத்தில் நடைபெற்ற புதிய தலைமுறையின் தமிழன் விருதுகளுக்கான பரிந்துரை சேகரிப்பு பயணத்தை பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் முத்துச்செழியன் துவக்கி வைத்தார்
இலக்கியம், சமூக சேவை, தொழில், கலை, அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு புதிய தலைமுறை கடந்த ஆண்டில் இருந்து தமிழன் விருதுகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு விருதுகளுக்கு பல்வேறு மாவட்ட பொதுமக்களும் தங்களுடைய பரிந்துரைகளை ஆர்வமுடன் வழங்கி வருகின்றனர். பரிந்துரைகளை சேகரிக்கும் பொருட்டு இன்று
சேலம் மற்றும் தேனியில் வாக்குகள் சேகரிக்கப்பட்டன. சேலம் வந்த புதிய தலைமுறை வாகனம் பெரியார் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து தனது சேகரிப்பை துவக்கியது.
பல்கலைக்கழக மாணவ மாணவியர் மிகுந்த ஆர்வத்துடன் தங்கள் பரிந்துரை விண்ணப்பங்களை பூர்த்தி செய்தனர். தொடர்ந்து சேலத்தின் பல்வேறு கல்லூரிகளுக்கும் சென்ற புதிய தலைமுறை வாகனத்தை வரவேற்ற மாணவ மாணவியர்கள் தங்கள் பரிந்துரை விண்ணப்பங்களை உற்சாகத்தோடு பூர்த்தி செய்தனர் .
இதே போல் தேனி மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் தமிழன் விருதுகளுக்கான பரிந்துரைகள் சேகரிக்கப்பட்டன.
இணைய செய்தியாளர் -Er.மாதேஷ்