மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் உடல் அவரது சொந்த
கிராமமான பூலாவரியில் உள்ள அவரது தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
மூச்சுத்திணறல் காரணமாக நேற்று சென்னையில் காலமான வீரபாண்டி
ஆறுமுகத்தின் உடல், அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் பூலாவரியில்
பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திமுக பொருளாளர் ஸ்டாலின்,
நாடாளுமன்ற திமுகத் தலைவர் டிஆர் பாலு, கனிமொழி, திமுக முன்னாள்
அமைச்சர்கள் கோசி மணி, கேஎன் நேரு, பொன்முடி, பெரியசாமி, சுப தங்கவேலன்
உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். மதிமுக பொதுச்செயலர் வைகோ நேரில்
சென்று வீரபாண்டி ஆறுமுகத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், பாமக, தேமுதிக,
கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிர்வாகிகள் பலரும் அஞ்சலி செலுத்தினர். பின்னர்
பிற்பகலில் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் கலந்து
கொண்டனர். பூலாவரி கிராமத்தில் உள்ள அவரது சொந்த தோட்டத்தில் வீரபாண்டி
ஆறுமுகத்தின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இணைய செய்தியாளர் -Er.மாதேஷ்