இந்த காய்ச்சலை ஆரம்பித்திலேயே மருத்துவ
பரிசோதனைகள் மூலம் கண்டறிய முடியும். அதோடு டெங்கு காய்ச்சல் வந்தால் அதற்கான அறிகுறிகள்
காய்ச்சல் அதிகமாக இருக்கும், உடம்பு வலி அதிகமாகிவிடும், கண்
சிவந்துவிடும், முதுகு வலி, எலும்புவலி அதிகமாக இருக்கும், சாப்பாடு
ஏற்றுக்கொள்ளாது.
டெங்கு பரவாமல் தடுக்க முதலில் கொசுவை
ஒழிக்க வேண்டும். அதற்கு வீடுகள், சாலைகள், தண்ணீர் டேங்குகளை சுத்தமாக
வைத்திருக்க வேண்டும். பீ.டி என்கிற கொசு மருந்து, அபேட் என்கிற மருந்தை
தண்ணீர் தொட்டிகளில் கலக்க வேண்டும். இதன் மூலம் கொசு உற்பத்தி
தடுக்கப்படும். பைத்ரியோ ரம் என்ற கொசு மருந்தை அடித்தால் கொசுக்கள்
அழிந்து விடும்.
இணைய செய்தியாளர் -Er.மாதேஷ்