திமுக மூத்த தலைவர்ரும், முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம்
சென்னை மருத்துவமனையில் இன்று காலை உயிரிழந்தார். கடந்த 1 வாரமாக மூச்சுத்
திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் சிகிச்சை
பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு 3 நாட்கள் துக்கம் அனுஷரிக்கப்
போவதாக திமுக அறிவித்துள்ளது. திமுக கொடிகள்அனைத்தும் அரைக் கம்பத்தில்
பறக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வீரபாண்டி ஆறுமுகத்தின் அரசியல் வாழ்க்கை : மறைந்த
வீரபாண்டி ஆறுமுகத்திற்கு வயது 75 திமுகவில் 1957-ல் உறுப்பினரானார். தமிழக
சட்டப்பேரவையில் 1962 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் 6 முறை
எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். 1978 முதல் 84 வரையிலான காலகட்டத்தில் சட்ட
மேலவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார் வீரபாண்டி ஆறுமுகம். திமுக
ஆட்சியில் 3 முறை அமைச்சராக பதவி வகித்துள்ளார் 1989 ஆண்டு முதல் முறையாக
திமுக ஆட்சியில் அமைச்சரானார்.
அப்போது, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகத் துறை அவருக்கு
வழங்கப்பட்டது. தொடர்ந்து 2011-ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் அமைச்சராக
பதவி வகித்த வீரபாண்டி ஆறுமுகம் கடைசியாக வேளாண்மை துறையை கவனித்து
வந்தார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் சங்ககிரி தொகுதியில் அதிமுகவிடம்
தோல்வியடைந்தார்.
இணைய செய்தியாளர் -Er.மாதேஷ்