சேலம் அருகே காமனேரியில் நாட்டு வெடிமருந்து தயாரிக்கும் குடோனில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் குடோனின் உரிமையாளர் சாந்தி, சிவகாமி மற்றும் அங்கு
பணியாற்றிய வந்த சிறுவர்கள் கேசவன், சூர்யா ஆகியோர் சம்பவ இடத்திலேயே
உயிரிழந்தனர்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் தங்கம் என்பவர் உயிரிழந்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் சிலரின் நிலைமை
கவலைக்கிடமாக உள்ளதால் உயிர் பலி அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம்
ஏற்பட்டுள்ளது.
காமனேரியை அடுத்த சாத்தப்பாடி என்ற இடத்தில் செயல்பட்டு வந்த இந்த
குடோனில், திருவிழாக்களில் வாணவேடிக்கை நடத்துவதற்கான பட்டாசுகள்
தயாரிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
வழக்கம் போல் இன்று பட்டாசு தயாரிக்கும்போது வெடி விபத்து ஏற்பட்டதில் அந்த குடோன் முழுவதும் இடிந்து சேதமடைந்தது.
3 தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து நடந்த இடத்தை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேரில் சென்று பார்வையிட்டனர்
- இணைய செய்தியாளர் -Er.மாதேஷ்