கர்நாடகாவின் கிருஷ்ணாசாகர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரிநீர், இன்று மேட்டூர் வந்தடைந்தது.
நேற்று முன்தினம் இரவு திறந்துவிடப்பட்ட காவிரி நீர், தமிழக எல்லையான
பிலிகுண்டுவுக்கு நேற்று வந்தது. அப்போது 500 கனஅடி நீர் மட்டுமே வந்து
கொண்டிருந்தது. தற்போது இந்த நீரின் அளவு அதிகரித்துள்ளதாக மத்திய நீர்
ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நீர், இன்று காலை 11 மணியளவில் மேட்டூர் அணையை வந்தடைந்தது.தமிழகம்
வரும் நீரின் அளவை, பிலிகுண்டுவில் உள்ள நீர் அளவிடும் மையத்தில் 2 மணி
நேரத்திற்கு ஒருமுறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றன.
இணைய செய்தியாளர் -Er.மாதேஷ்