- இணைய செய்தியாளர்  -Er.மாதேஷ்

சேலம் பட்டாசு குடோன் விபத்து 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

         சேலம் அருகே காமனேரியில் நாட்டு வெடிமருந்து தயாரிக்கும் குடோனில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் குடோனின் உரிமையாளர் சாந்தி, சிவகாமி மற்றும் அங்கு பணியாற்றிய வந்த சிறுவர்கள் கேசவன், சூர்யா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் தங்கம் என்பவர் உயிரிழந்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிர் பலி அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
காமனேரியை அடுத்த சாத்தப்பாடி என்ற இடத்தில் செயல்பட்டு வந்த இந்த குடோனில், திருவிழாக்களில் வாணவேடிக்கை நடத்துவதற்கான பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
வழக்கம் போல் இன்று பட்டாசு தயாரிக்கும்போது வெடி விபத்து ஏற்பட்டதில் அந்த குடோன் முழுவதும் இடிந்து சேதமடைந்தது.
3 தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து நடந்த இடத்தை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேரில் சென்று பார்வையிட்டனர்

- இணைய செய்தியாளர்  -Er.மாதேஷ்

சேலத்தில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம்: 2 பேர் கைது


   சேலம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த ஆதரவற்ற இரண்டு சிறுமிகளை அதே பகுதியைச் சேர்ந்த இருவர் பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சிகர சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதில் ஒரு சிறுமியின் வயது 12 என்றும் மற்றொரு சிறுமியின் வயது 16 என்றும் தெரியவந்துள்ளது. தாய் தந்தையரின் ஆதரவை இழந்த, இந்த இரு சிறுமிகளும், தங்களது பாட்டியுடன் அம்மாபேட்டையில் வசித்து வந்துள்ளனர். பின்னர், பாட்டி இறந்துவிட தனித்துவிடப்பட்ட சிறுமிகள் இருவரும், சேலம் பேருந்து நிலைய பகுதிகளில் சுற்றித் திரிந்துள்ளதாக கூறப்படுகிறது.
தனது வீட்டில், வீட்டு வேலை செய்யுமாறும், தேவையான உதவிகளை செய்வதாகவும் கூறி அவர்கள் இருவரையும், அதே பகுதியைச் சேர்ந்த நாகசாமி என்பவர் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர்களை நாகசாமி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அவருடன், அவரது உறவினரான சந்திரன் என்பவரும் இந்த தகாத செயலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
இது குறித்த தகவல் அறிந்த சமூக ஆர்வலர் ஒருவர் சிறுமிகளை காப்பாற்றியதோடு, காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து நாகசாமியையும், சந்திரனையும் சேலம் போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். சிறுமிகள் இருவரும் காப்பகம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
- இணைய செய்தியாளர்  -Er.மாதேஷ்

காவிரி நீர் மேட்டூர் வந்தடைந்தது

          கர்நாடகாவின் கிருஷ்ணாசாகர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரிநீர், இன்று மேட்டூர் வந்தடைந்தது.
நேற்று முன்தினம் இரவு திறந்துவிடப்பட்ட காவிரி நீர், தமிழக எல்லையான பிலிகுண்டுவுக்கு நேற்று வந்தது. அப்போது 500 கனஅடி நீர் மட்டுமே வந்து கொண்டிருந்தது. தற்போது இந்த நீரின் அளவு அதிகரித்துள்ளதாக மத்திய நீர் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நீர், இன்று காலை 11 மணியளவில் மேட்டூர் அணையை வந்தடைந்தது.தமிழகம் வரும் நீரின் அளவை, பிலிகுண்டுவில் உள்ள நீர் அளவிடும் மையத்தில் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றன.
இணைய செய்தியாளர்  -Er.மாதேஷ்

சேலம் : தேமுதிகவினர் சாலை மறியல்

         சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் அதிமுகவினர் அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டிய தேமுதிக பெண் சட்டமன்ற உறுப்பினர் உட்பட அக்கட்சியினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆத்தூர் அருகேயுள்ள தலைவாசல் பகுதியில் இன்று நடைபெற்றது. இதில், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கெங்கவல்லி தேமுதி எம்எல்ஏ சுபாவுக்கு பேச வாய்ப்பு தருவது தொடர்பாக இரு கட்சியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அமைச்சர் பேசிய பின்னர் எம்எல்ஏ.,வுக்கு பேச வாய்ப்பு தருவது மரபு இல்லை என அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இதை எதிர்த்து சுபாவும் அவரது ஆதரவாளர்களும் கோஷம் எழுப்பினர். அப்போது அவரை அதிமுகவினர் அவதூறாக பேசியதாக கூறி திடீரென சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். அதன்பின்பு, சுபா தலைவாசல் காவல் நிலையத்தில் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது புகார் தெரிவித்தார். அவரது தூண்டுதலின் பேரில் அதிமுகவினர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்
இணைய செய்தியாளர்  -Er.மாதேஷ்

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உடல் அடக்கம்

              றைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் உடல் அவரது சொந்த கிராமமான பூலாவரியில் உள்ள அவரது தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
மூச்சுத்திணறல் காரணமாக நேற்று சென்னையில் காலமான வீரபாண்டி ஆறுமுகத்தின் உடல், அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் பூலாவரியில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திமுக பொருளாளர் ஸ்டாலின், நாடாளுமன்ற திமுகத் தலைவர் டிஆர் பாலு, கனிமொழி, திமுக முன்னாள் அமைச்சர்கள் கோசி மணி, கேஎன் நேரு, பொன்முடி, பெரியசாமி, சுப தங்கவேலன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். மதிமுக பொதுச்செயலர் வைகோ நேரில் சென்று வீரபாண்டி ஆறுமுகத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், பாமக, தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிர்வாகிகள் பலரும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் பிற்பகலில் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். பூலாவரி கிராமத்தில் உள்ள அவரது சொந்த தோட்டத்தில் வீரபாண்டி ஆறுமுகத்தின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 

இணைய செய்தியாளர்  -Er.மாதேஷ்

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் காலமானார்


 
 
      திமுக மூத்த தலைவர்ரும், முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் சென்னை மருத்துவமனையில் இன்று காலை உயிரிழந்தார். கடந்த 1 வாரமாக மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு 3 நாட்கள் துக்கம் அனுஷரிக்கப் போவதாக திமுக அறிவித்துள்ளது. திமுக கொடிகள்அனைத்தும் அரைக் கம்பத்தில் பறக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
வீரபாண்டி ஆறுமுகத்தின் அரசியல் வாழ்க்கை : மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்திற்கு வயது 75 திமுகவில் 1957-ல் உறுப்பினரானார். தமிழக சட்டப்பேரவையில் 1962 முதல் 2011 வரையிலான  காலகட்டத்தில் 6  முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். 1978 முதல் 84 வரையிலான  காலகட்டத்தில் சட்ட மேலவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார் வீரபாண்டி ஆறுமுகம். திமுக ஆட்சியில் 3 முறை அமைச்சராக பதவி வகித்துள்ளார் 1989 ஆண்டு முதல் முறையாக திமுக ஆட்சியில் அமைச்சரானார்.
அப்போது, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகத் துறை அவருக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து 2011-ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்த வீரபாண்டி ஆறுமுகம் கடைசியாக  வேளாண்மை துறையை கவனித்து வந்தார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் சங்ககிரி தொகுதியில் அதிமுகவிடம் தோல்வியடைந்தார்.
இணைய செய்தியாளர்  -Er.மாதேஷ்

சேலத்தில், ஒருங்கிணைந்த கலை பண்பாட்டு மையம் : முதலமைச்சர் உத்தரவு

       சேலத்தில், ஒருங்கிணைந்த கலை பண்பாட்டு மையம் அமைக்க ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.மாவட்ட அரசு இசை பள்ளி, சவகர் சிறுவர் மன்றம், நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியம் அடங்கிய இந்த மையம் தளவாய்பட்டியில் அமையவுள்ளது. அதில், கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட மண்டல உதவி இயக்குநர் அலுவலகமும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு அரசு இசை கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் மாதாந்திர ஊக்கத்தொகை 250 ரூபாயிலிருந்து 500-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருவையாறு ஆகிய 4 இடங்களில் படிக்கும் 691 மாணவர்கள் பயன்பெறுவார்கள் என அரசு அறிவித்துள்ளது.
இந்த புதிய உத்தரவால், அரசிற்கு 15லட்சத்து 48ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவுரை கூறியவர் அடித்துக் கொலை ( காணொளி )

    குடிபோதையில் இருந்த இளைஞர்கள், உதவி செய்ய வந்தவரையே கொலை செய்துள்ள கொடூர சம்பவம் சேலம் மாவட்டம் ஆத்தூரில் நிகழ்ந்துள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் ஆரம்ப சுகாதார மையத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்த சண்முக சுந்தரம் என்பவர், தீபாவளியன்று தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, 5 இளைஞர்கள் குடிபோதையில் 2 இருசக்கர வாகனங்களில் சென்றனர். மிகவும் வேகமாகச் சென்ற அந்த இளைஞர்கள், திடீரென வாகனங்களில் இருந்து தவறி, கீழே விழுந்தனர். இதையடுத்து அந்த இளைஞர்களுக்கு உதவி செய்த சண்முக சந்தரம், வாகனத்தில் நிதானமாக செல்லும்படி, அவர்களுக்கு அறிவரை கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், சண்முக சுந்தரத்தை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் அருகேயுள்ள மைதானத்துக்கு இழுத்துச் சென்று, சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதில், பலத்தக்காயமடைந்த சண்முக சுந்தரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-இணைய செய்தியாளர்  -Er.மாதேஷ்

டெங்கு,மலேரியா, டைபாய்டு போன்ற கொடிய காய்ச்சல்கள் பரவிவருகிறது


   ந்த காய்ச்சலை ஆரம்பித்திலேயே மருத்துவ பரிசோதனைகள் மூலம் கண்டறிய முடியும். அதோடு டெங்கு காய்ச்சல் வந்தால்  அதற்கான அறிகுறிகள்  காய்ச்சல் அதிகமாக இருக்கும், உடம்பு வலி அதிகமாகிவிடும், கண் சிவந்துவிடும், முதுகு வலி, எலும்புவலி அதிகமாக இருக்கும், சாப்பாடு ஏற்றுக்கொள்ளாது. 

டெங்கு பரவாமல் தடுக்க முதலில் கொசுவை ஒழிக்க வேண்டும். அதற்கு வீடுகள், சாலைகள், தண்ணீர் டேங்குகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பீ.டி என்கிற கொசு மருந்து, அபேட் என்கிற மருந்தை தண்ணீர் தொட்டிகளில் கலக்க வேண்டும். இதன் மூலம் கொசு உற்பத்தி தடுக்கப்படும். பைத்ரியோ ரம் என்ற கொசு மருந்தை அடித்தால் கொசுக்கள் அழிந்து விடும்.
இணைய செய்தியாளர்  -Er.மாதேஷ்

சேலத்தில் ஒரே நாளில் காய்ச்சலுக்கு 3 சிறுமிகள் பலி

   சேலத்தில் காய்ச்சல் காரணமாக நேற்று ஒரே நாளில் மூன்று சிறுமிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இதில், இரண்டு பேர் சேலம் அரசு மருத்துவமனையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இடைப்பாடியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹரிணி, அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், நேற்று மரணமடைந்தார்.
இதேபோன்று, நெத்திமேடு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீவர்ஷா என்ற சிறுமியும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். ஸ்ரீவர்ஷாவின் சகோதரியான ஸ்ரீநிஷாவும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று காலை ஸ்ரீநிஷா  உயிரிழந்த நிலையில், மாலையில் ஸ்ரீவர்ஷாவும் மரணமடைந்தார். இரட்டைப் பிறவிகளாக இவர்கள் இருவரும் ஒரே நாளில் உயிரிழந்தது, அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதனிடையே, சேலம் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஒரே படுக்கையில் மூன்று குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். அதன்படி, காய்ச்சலால் உயிரிழந்த ஒரு குழந்தையின் அருகிலேயே மற்றொரு குழந்தைக்கு  பல மணி நேரம் சிகிச்சை அளிக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து, ஏராளமானோர் திரணடு நேற்று அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
இணைய செய்தியாளர்  -Er.மாதேஷ்

மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைப்பு

   டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக, மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
நேற்று 63.18 அடியாக இருந்த மேட்டூ்ர் அணையின் நீர்மட்டம் இன்று சற்று அதிகரித்து 63.46 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 27.33 டி.எம்.சி.யாக உள்ளது. நீர்வரத்தை பொறுத்தவரை, தமிழகத்தில் பரவலாக மழை பெய்த போதிலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவாக உள்ளதால், நேற்று 5, 410 கன அடியாக இருந்த நீர் வரத்து, இன்று காலை 3 ஆயிரத்து 673 கன அடியாக குறைந்துள்ளது.
எனினும், காவிரி டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருவதால், இன்று 1,000 கன அடி நீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது.

                                                                                                                   -Er.மாதேஷ்

வேகமாக குறையும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்

                        மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.
    கடந்த 10 ஆம் தேதி 71 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் தற்போது 66 அடியாக குறைந்துள்ளது. அணையில் நீர் இருப்பு 29.656 டி.எம்.சி,ஆக உள்ளது. கர்நாடக அரசு தமிழகத்திற்கு வழங்கும் காவிரி நதிநீரை கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறுத்திவிட்டது.
இதனால் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1,441 கனஅடி நீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் சம்பா சாகுபடிகளுக்காக அணையில் இருந்து வினாடிக்கு 18,351 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

    மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளதால், அணையின் நீர்மட்டமும் குறையத் தொடங்கியுள்ளது. கடந்த 19ம் தேதியன்று வினாடிக்கு 12 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருந்தது. அது படிப்படியாக குறைந்து தற்போது, வினாடிக்கு வெறும் மூவாயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது.
நீர்வரத்து குறைந்த போதிலும் டெல்டா பாசனத் தேவைக்காக மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுவதால் அணையின் நீர்மட்டம் குறையத் தொடங்கியுள்ளது. கடந்த மூன்று நாட்களில் அணையின் நீர் மட்டம் இரண்டு அடி குறைந்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 82 அடியாக இருந்தது. தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என கர்நாடகா திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்ட நிலையில், டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பா சாகுபடியை, வடகிழக்குப் பருவமழைதான் காப்பாற்ற முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
-பசுமைநாயகன்

துளசி

துளசி இலைகளை பசை போல அரைத்து, குளிக்கும்போது ஷாம்புவுக்குப் பதிலாக தலையில் தேய்த்துக் குளித்தால் பேன்கள் ஓடிவிடும்.

20 துளசி இலைகள், 1 ஆரஞ்சுப் பழத்தின் தோல் - இரண்டையும் காயவைத்துப் பொடியாக்கி, பல் துலக்க... பற்கள் பளிச்சிடும்.

துளசி இலை, மிளகு, சுக்கு - மூன்றையும் சம அளவு எடுத்து, தண்ணீரில் போட்டுக் காய்ச்சி கஷாயம் எடுங்கள். மிதமான சூட்டில் இந்த கஷாயத்தைக் குடித்தால்... தொண்டை வலி, மார்புச்சளி, ஜலதோஷத்தில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
-இணைய செய்தியாளர் - வெங்டேஸ்

கொழுப்பை குறைக்கும் சப்போட்டா பழம்

http://morningglory.in/images/fruits/sapota-big.jpg
உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்பை குறைக்கும் சப்போட்டா பழம் !!!

சத்தான பழம் என்றுதான் சப்போட்டா பற்றி அனைவரும் நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சருமத்தை மிருதுவாக்கும் தன்மை சப்போட்டா பழத்திற்கு உண்டு என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நம் இளமைக்கும் அழகுக்கும் சப்போர்ட் தரும் சப்போட்டா பழம் பற்றி சில சுவையான தகவல்கள் உங்களுக்காக.

100 கிராம் சப்போட்டா பழத்தில் 28 மில்லி கிராம் கால்சியமும், 27 மில்லிகிராம் பாஸ்பரசும் உள்ளது. எனவே தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டால் வளர்ச்சி அதிகரிக்கும், எலும்புகள் வலுவடையும், சருமம் பளபளப்பாகும்.

சப்போட்டா உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்பை குறைக்கும். சப்போட்டா பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், இரண்டு பழத்துடன், ஒரு டம்ளர் பால் சேர்த்து, மிக்ஸியில் அடித்து மில்க் ஷேக் செய்து சாப்பிடலாம்.

ஒல்லியாக தெரிவது சிலரது அழகுக்கு குறைச்சலாக இருக்கும். அவர்கள் பூசினார் போல தோற்றப் பொலிவுடன் மாற சப்போட்டா பழம் மிகுந்த உதவிபுரிகிறது. தோல் நீக்கியா சப்போட்டா பழத்துடன் சிறிதளவு பால் சேர்த்து அரைக்கவும். அந்த விழுதுடன் 2 டீஸ்பூன் வெள்ளரி விதைப் பவுடன் கலந்து குளிப்பதற்கு முன் கை, முழங்கை விரல்களில் நன்றாக பூசி குளிக்கவும். சப்போட்டாவில் உள்ள ஈரப்பதம் கைகளை பொலிவாக்கி, பூசினாற் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.
கன்னம் ஒட்டிப்போய் எலும்பு தூக்கிக்கொண்டிருக்கிறதா? கொழு, கொழு கன்னங்கள் பெற சப்போட்டா பழ சதையை எடுத்து அத்துடன் ரோஸ் வாட்டர், சிறிது சந்தன பவுடர் கலந்து கிரீமாக தயார் செய்து கொள்ளவும். இந்த கிரீமை முகம் முதல் கழுத்துவரை இட, வலமாக தடவ வேண்டும். காய்ந்த பின்னர் இளம் சூடான நீரில் முகம் கழுவ வேண்டும். வாரம் இருமுறை இதுபோல செய்து வர பளபளவென கன்னம் மின்னும்.

ஒரு டீஸ்பூன் பயத்தமாவுடன் அரை டீஸ்பூன் சப்போட்டா பழ விழுது, 4 துளி விளக்கெண்ணெய் கலந்து, குளிப்பதற்கு முன் உள்ளங்கை, விரல், நகம், பாதங்களில் தடவி, குளித்து வர அவை வறட்சி நீங்கி மென்மையாக மிளிரும். சப்போட்டா பழம், ரத்த ஓட்டத்தை சீராக்கி, கொழுப்பை கரைக்கிறது. இது வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்து. வயிற்றெரிச்சல், மலச்சிக்கல், மூலநோய்க்கு சிறந்த தீர்வாகிறது.

தூக்கம் தரும் சப்போட்டா ஜூஸ்

இரவெல்லாம் தூக்கம் இல்லாமல் தவிக்கிறவர்கள், சப்போட்டா ஜூஸ் குடித்துவிட்டு படுத்தால், அடுத்த நொடி தூக்கம் நம்மை தாலாட்டும். பனைவெல்லம், சுக்கு, சித்தரத்தை மூன்றும் தலா ஒரு சிட்டிகை எடுத்து அதனுடன் ஒரு சப்போட்டா பழ பேஸ்ட்டை கலந்து லேகியம்போல சாப்பிட்டால், திடீர் ஜுரம் வந்த வேகத்தில் காணாமல் போய்விடும்.
பித்தம் குணமாகும்

சப்போட்டா பழ ஜூசு டன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் சளித்தொல்லை நீங்கும். இது பித்தத்தினால் ஏற்படும் வாந்தி மயக்கத்தை போக்குகிறது. சப்போட்டா பழத்துடன் உரு டீஸ்பூன் சீரகம் கலந்து சாப்பிட பித்தம் நீங்கும். 2 சப்போட்டா பழத்துடன், ஒன்றரை டீஸ்பூன் டீ தண்ணீரை கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கின் போது ரத்தம் கலந்து வெளியேறுவது குணமாகும்.

முடி கொட்டுவது கட்டுப்படும்

கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா? கவலைவேண்டாம். உங்களுக்கு கைகொடுக்கிறது ‘சப்போட்டா கொட்டை தைலம்’. ஒரு டீஸ்பூன் சப்போட்டா கொட்டை பவுடருடன், ஒரு கப் நல்லெண்ணெய், கால் டீஸ்பூன் மிளகுத்தூள் கலந்து அடுப்பில் வைத்து கை பொறுக்கும் சூட்டில் காய்ச்சுங்கள். பின்னர் ஆறவைத்து வடிகட்டிக்கொள்ளுங்கள். இந்த தைலத்தை சிறிதளவு பஞ்சில் நனைத்து படிப்படியாக தலையில் தேய்த்து அரைமணிநேரம் ஊறவைக்க வேண்டும். சீயக்காய், கடலைமாவு தேய்த்து குளிக்க ஒரு மாதத்தில் முடி கொட்டுவது நின்றுவிடும்.இந்தியாவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக சப்போட்டா பயிரிடப்படுகிறது. குஜராத்தில் அதிக பரப்பளவில் பயிரிடப்படுவதால், குஜராத்திற்கு ‘சப்போட்டா மாநிலம்’ என்று ஒரு சிறப்புப் பெயர் உள்ளது.
நாம் சாப்பிடும் நூறு கிராம் சப்போட்டாப் பழத்தில் கீழ்க்கண்ட அளவு சத்துப்பொருட்கள் அடங்கியுள்ளன. புரதம் 1.0 கிராம், கொழுப்பு 0.9 கிராம், நார்ப்பொருள் 2.6 கிராம், மாவுப்பொருள் 21.4 கிராம், கால்சியம் 2.1 மில்லி கிராம், பாஸ்பரஸ் 27.0 மி.கி, இரும்புச் சத்து 2.0 மி.கி, தரோட்டின் 97 மைக்ரோகிராம், ரைபோஃபிளோவின் 0.03 மி.கி, நியாசின் 0.02 மி.கி, வைட்டமின் சி 6.1 மி.கி.சப்போட்டா பழத்திலுள்ள சில சத்துப்பொருட்களும், வைட்டமின்களும், இரத்த நாளங்களைச் சீராக வைக்கும் குணம் கொண்டவை.

இவை இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சிறப்பு செயல்பாடு உடையன ஆகும். கொலஸ்டிரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது இயற்கை மருந்தாகும். தினம் இரண்டு சப்போட்டா பழங்கள் சாப்பிடுவது நலன் பயக்கும்.இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்கு ஏற்ப பாதுகாக்கும் தன்மையும் சப்போட்டா பழத்திற்கு உண்டு என அமெரிக்காவில் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கின்றது.சப்போட்டா பழச்சாறுடன், தேயிலைச் சாறும் சேர்த்துப் பருகினால், இரத்தபேதி குணமாகும்.

சப்போட்டா பழக்கூழ், கோடையில் ஏற்படும் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும், தாகத்தையும் தணிக்கும் தன்மையது.தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், இரவில் படுக்கைக்குப் போகும் முன் ஒரு தம்ளர் சப்போட்டா பழக்கூழ் குடித்தால், நிம்மதியான நித்திரைதான்.
ஆரம்பநிலை காசநோய் உள்ளவர்கள் சப்போட்டா பழக்கூழ் குடித்து, ஒரு நேந்திரன் பழமும் தின்று வர, காசநோய் குணமாகும்.மூல நோய் உள்ளவர்களுக்கு, குறிப்பாக இரத்த மூலம் உள்ளவர்களுக்கு சப்போட்டா பழம் நல்ல எளிய இயற்கை மருந்து.பித்தத்தைப் போக்கும் குணம் சப்போட்டா பழத்திற்கு உண்டு.

சப்போட்டா பழத்தைத் தின்று, பின்னர் ஒரு தேக்கரண்டி சீரகத்தை நன்கு மென்று விழுங்கினால் பித்தம் விலகும். பித்த மயக்கத்திற்கும் இது நல்ல மருந்து.சப்போட்டா கூழுடன், சிறிது சுக்கு, சித்தரத்தை பொடித்திட்டு, இதில் கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் கணிசமாக இருப்பதால், எலும்புகளை வலுப்படுத்தும்.சப்போட்டா கூழுடன் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துப் பருகினால் சளி குணமாகும்.சப்போட்டா அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேனியைப் பளபளப்பாக வைக்கும்.
                                                                                            -பசுமை நாயகன்

மூலிகை பெட் ரால் ராமர் பிள்ளை



''ஆமா சார், 15 வருஷத்துக்கு முன்னால ஒரு லிட்டர் 13 ரூபாய்னு வித்தேன். இப்போ தொழில்நுட்பம் வளர்ந்துடுச்சு. அதனால ஒரு லிட்டர் அஞ்சு ரூபாய்க்குத் தயாரிக்கலாம். வரி விதிச்சா அதிக பட்சம் ஏழு ரூபாய் வரும். இப்போ ஒரு லிட்டர் 70 ரூபாய். இந்தக் காசுக்கு 14 லிட்டர் மாற்று எரிபொருள் போடலாம். நம்புறதுக்கு கஷ்டமாத்தான் இருக்கும். ஆனா, நடைமுறைக்கு வரும்போது எல்லாம் சரியாகிடும். நிச்சயம் என்னை நிரூபிப்பேன். ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்குத் திருப்புமுனையான செய்தியாக இது இருக்கும்!'' ....இத நம்பலாமா ???                                                                                         நன்றி :விகடன்
தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ??

மாலை மணி 6:30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள் . அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள் , திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள்.

அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள் , உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம் ??
துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர் ! உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும், ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும் , இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்.

இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்முக்கொண்டே இருக்க வேண்டும். மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது , இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்தஓட்டம் சீரடையும்.

இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்..பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்..இந்த தகவலை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள்..தேவை இல்லாத விசயங்களையும், ஜோக்குகளையும் பகிர்வோர் , உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள்...
                                                                                             -தேனி முருகேஸ்வரன்

அன்பான உறவுகளே இன்று +2 ரிஸல்ட் வெளியாகிறது ..வெற்றி பெறும் பிள்ளைகளை மேலும் ஊக்கப்படுத்துங்கள் தோல்வி பெறும் பிள்ளைகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துங்கள் காயப்படுத்திவிடாதீர்கள் இன்றைய தோல்வி நாளைய இமாலய வெற்றிக்கு அடித்தளம் என்பதை கூறி அரவணையுங்கள் குறிப்பாக பெண்பிள்ளைகள் மிகவும் சோர்ந்துவிடுவார்கள் அன்போடு அரவணைத்து அவர்களின் சோர்வான மனநிலையை மாற்றுவதே அவர்களின் எதிர்காலத்துக்கான அருமருந்து ....         
                                                                                                                    
மாணவர்களின் எதிர்காலம் அக்கரையில்   -சிபிசந்தர்